வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
காஞ்சிபுரம்: ஆரியபெரும்பாக்கம் வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.









