Religion
மஹா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை
தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி பஞ்., செந்தில்நகரில் செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன், மஹா மாரி-யம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 23ம் தேதி நடந்தது.
அதை தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. கடந்த, 4ம் தேதி கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், நேற்று சங்கு அபிஷேக பூஜை நடந்தது. இதில், 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விசேஷ யாகம் நடந்தது. தொடர்ந்து, பொதுமக்கள் சங்கு புனிதநீரை அம்மனுக்கு அபி-ஷேகம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.