Religion
வெங்கட்டரமண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்டரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விநாயகர் பூஜை, கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், முளைப்பாரி விதைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி-யது.
வரும், 12ம் தேதி காலை, 10:45 மணிக்கு வெங்கட்டரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்தக்குடம் மற்றும் மாலை, 3:00 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலம் நடக்கிறது. மாலை மங்கள இசை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு மங்கள இசை. இரண்டாம் கால பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராய-ணமும், தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்டரமண கோவில் கும்பாபிஷேகம் நடக்-கிறது. பின், சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்-பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.