Religion
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குளித்தலை; குளித்தலை தாசில்தார் அலுவலக வளாகத்தில், அருள்பாலித்து வரும் சித்தி விநாயகர் கோவில் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய வருவாய்த்-துறை மற்றும் விழா குழுவினர் முடிவு செய்-தனர். இதன்படி, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற, கடந்த 5ம் தேதி காலை குளித்தலை கடம்-பவனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் எடுத்து
வந்தனர்.
பின்னர் அந்த கும்பத்தை சிவாச்சாரியார்கள், யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை நடத்தினர். நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. புனிதநீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்தனர், பிறகு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின், புனிதநீர் பக்-தர்கள் மீது தெளிக்கப்பட்டது, விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் குளித்தலை சப்-க-லெக்டர் சேஷாத்ரிமயும் தீபி சானு, மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், வி.ஏ.,ஓ.க்கள் முத்-துக்குமார், குமரேசன், கிராம நிர்வாக உதவி-யாளர் ரத்தினம் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை பணியாளர்கள், பொது-மக்கள் கலந்து கொண்டனர்.