Religion
பிள்ளையார்பாளையம் வில்வநாதர் கோவிலில் 17ல் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி நடக்கிறது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் நான்கு தெருவார் தோப்பில், காமாட்சி அம்மன் உடனுறை வில்வநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயத்திற்கு சொந்தமான பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகஸ்தர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதில், 17ம் தேதி காலை 11:50 மணிக்கு, மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பர்வதமலை மவுனகுருவின் சீடர் சவுந்தரானந்த சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டை நான்கு தெருவார் செங்குந்த சமுதாயத்தினர், நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் திருப்பணி குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர்.