Religion
விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை:குளித்தலை அருகே, இரணியமங்கலம் பஞ்., தெற்கு மேலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில்

அருகே, இரணியமங்கலம் பஞ்., தெற்கு மேலப்பட்டி கிராமத்தில்
அமைந்துள்ள விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டது.
இக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை,
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து மேளதாளம்
முழங்க புனிதநீர் எடுத்து வந்தனர்.
சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை,
விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை,
மிருத்ங்சங்கர்னம், பூர்ணாஹூதி, திரவ்யாஹூதி, மகா தீபாராதனை
உள்ளிட்ட முதல்கால பூஜை செய்தனர். நேற்று காலை, இரண்டாம் கால பூஜை
நடந்தது. தொடர்ந்து, புனிதநீர் கும்பத்தை, மங்கள வாத்தியம் முழங்க
கடம் புறப்பாடு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
அதை தொடர்ந்து, மூலவர்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.