Religion
மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வரும் 17 ம் தேதி கும்பாபிஷேகம்
கடலுார்: புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே.எஸ்டேட் தோட்டத்தில் உள்ள விநாயகர், முருகன், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி நடக்கிறது.
இதற்கான பூஜை வரும் 13ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு சாந்தி ேஹாமம், மூர்த்தி ேஹாமம், 15ம் தேதி மாலை யாகசாலை பிரவேசம், முதல் யாக பூஜை நடக்கிறது.
வரும் 16ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 17ம் தேதி காலை 5:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குநர் துரைராஜ், இயக்குநர்கள் கோமதி, கோகுல் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.