Religion
அரங்கநாத பெருமாள் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்
அனுப்பர்பாளையம்: அனுப்பர்பாளையத்தில் அமைந்துள்ள 74 ஆகனபட்டு கஞ்சக கன்னார் சமூகத்தாரின் ஸ்ரீ தேவி பூதேவி
அனுப்பர்பாளையத்தில் அமைந்துள்ள 74 ஆகனபட்டு கஞ்சக கன்னார் சமூகத்தாரின் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை (13-ம் தேதி) நடைபெறுகிறது.
விழாவையொட்டி இன்று (12-ம் தேதி) காலை 7:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, திவ்ய பிரபந்தம், ஹோமம், பிம்ப சுத்தி, திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை 6:00 மணிக்கு யாக சாலையில் ஹோமம், வேத பாராயணம், பூர்ணாகுதி, சாற்றுமுறை, திவ்ய பிரபந்தம், விமான கலச ஸ்தாபனம், திருவாராதனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெறுகின்றன.
நாளை காலை 7:00 மணிக்கு ஹோமம், திருவாராதனம், திவ்ய பிரபந்தம் ஆகியவற்றுக்குப்பின், காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கும்பாபிேஷக விழா மற்றும் கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.