Religion
மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரம் ஆலமரத்தடியில் மாணிக்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
அடுத்துள்ள காந்திபுரம் ஆலமரத்தடியில் மாணிக்க விநாயகர் கோவில்
அமைந்துள்ளது. இக்கோவிலின், 5ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி
சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது.
விநாயகருக்கு, நேற்று காலை பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்பட
பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரமாக முளைப்பாரி அம்மன், சப்த கன்னிகள், மஹா லக்ஷ்மி
அலங்காரத்துடன் விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு
தீபாராதனை நடந்தது.
விழாவில், காந்திபுரம் மற்றும் அதன் சுற்று
வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.