Religion
கும்பாபிஷேக விழா

விருதுநகர்: விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் எஸ்.எப்.எஸ்., பள்ளி பின்புறம் உள்ள ஸ்ரீ பரஞ்ஜோதி பகவதி பகவான் பிரார்த்தனை மையம் கும்பாபிஷேகம் விழா நேற்று அதிகாலை 4:30 மணி முதல் மங்கள இசை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.
மேலும் காலை 7:00 மணிக்கு மேல் மீனாட்சி சொக்கநாதர் கோயில் அர்ச்சகர் நாரம்புநாத பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை மைய நிர்வாகிகள் செய்தனர்.