Religion
லட்சுமிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
தர்மபுரி: தர்மபுரி அருகேவுள்ள, கிருஷ்ணாபுரம் லட்சுமிநாராயண பெருமாள் சுவாமி கோவில், மஹா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அருகே, கிருஷ்ணாபுரத்தில் உள்ள லட்சு-மிநாராயண பெருமாள் சுவாமி கோவில் கும்பா-பிஷேக விழா கடந்த, 30ம் தேதி கொடியேற்றத்-துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, கணபதி பூஜை, யாக சாலை பூஜை நடந்தது. நேந்று காலை, யாகசாலை கலசத்தில் இருந்த புனித-நீரை கோபுர கலசத்திற்கு தெளித்து கும்பாபி-ஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராத-னைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமிநாராயண பெருமாள், அருள் பாலித்தார். கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்-துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்-பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.