Religion
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி 9:35 மணிக்கு மேல் அரசமர விநாயகர், சப்த கன்னியம்மன், வடபத்ரகாளி அம்மன், கங்கை அம்மன் தனி சனீஸ்வரன் கோவில் கலசங்களுக்கும், 10:45 மணிக்கு, பால குஜாம்பிகை சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.