Religion
அனுமந்தராயர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
பேரூர்: பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயில், இரு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, கோயில் கட்டுமான பணி நடந்தது. பணிகள் முடிவடைந்து, வரும் 15ம் தேதி காலை 8 மணிக்கு புதிய விமான செப்பு கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு, முதற்கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 16ம் தேதி காலை 6:30 முதல் 7:15 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.