Religion
கும்பாபிஷேகத்துக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாராட்டு விழா
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, காசி விஸ்வநாதர் கோவில்-களில் நடந்த, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாக்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை கவுரவித்து பாராட்டு விழா, சோனா கல்வி நிறுவனத்தில் நடந்தது. அதில் கும்பாபிஷேக விழாக்களை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அறங்காவ-லர்கள், நன்கொடையாளர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள், குருக்கள், அர்ச்சகர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்களை, சிறப்பு விருந்தினரான, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா பாராட்டி கவுரவித்தார்.
இதையடுத்து அவர், 'கோவில் திருப்பணிகள், ஆன்மிக பணி-களில் அனைவரது பங்களிப்பும் முக்கியமானது. தொடர்ந்து இதுபோன்ற சமயப்பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என பாராட்-டினார். இதில் ஏராளமான பக்தர்கள், அறங்காவலர்கள், நன்கொ-டையாளர்கள், மக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்கான ஏற்பா-டுகளை சோனா கல்வி நிறுவன இயக்குனர் கார்த்திகேயன் தலை-மையில் குழுவினர் செய்திருந்தனர்.