Religion
வரசித்தி விநாயகர் கோவில் 13ல் மகா கும்பாபிேஷகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சித்துார் கடமன்பாறையில், வரசித்தி விநாயகர், பாலமுருகன், கன்னிமார் கருப்பராய சுவாமி கோவில் மகா கும்பாபிேஷக விழாவில், நாளை (12ம் தேதி) காலை, 10:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு முளைப்பாலிகை வழிபாடு, முதல்கால வேள்வி பூஜைகள் நடக்கிறது.
வரும், 13ம் தேதி காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, திரவியாஹுதி, நவகோள்கள் வேள்வி, வேள்வி நிறையாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு திருக்குடங்கள் ஞானத்திருவீதி உலா மற்றும் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. அதன்பின், அன்னம்பாலிப்பு, மகா அபிேஷகம், அலங்காரம், தசதரிசனம், பெரும்பேரோளி பூஜைகள் நடக்கிறது.