மதுரையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கட்டுப்பாடு; செப்.,15க்குள் நீர்நிலைகளில் கரைக்க அறிவுறுத்தல்
மதுரை: 'விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் அனுமதி அவசியம்' என, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. எஸ்.பி., தேவநாதன் முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., அன்பழகன், உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், பயிற்சி கலெக்டர் சித்தார்த் போகர்னா, மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், போலீஸ் துணை கமிஷனர்கள் கார்த்திக், இனிகோ திவ்யன், வனிதா, பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: செப். 14ல் விநாயகர் சதுர்த்தி. செப்.,13ல் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக நிறுவி, செப்.,15க்குள் விசர்ஜனம் (கரைத்தல்) செய்ய வேண்டும். பொது இடங்களில் வழிபட நகரில் போலீஸ் உதவி கமிஷனர், பிறபகுதிகளில் ஆர்.டி.ஓ.,விடம் அனுமதி பெற வேண்டும். இடஉரிமையாளர் ஒப்புதலுடன் உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்வாரியம், தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)









