Religion
விநாயகர் சதுர்த்தி விழா மாவட்ட நிர்வாகம் அறிவுரை
திருப்பூர், செப். 7– விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் விசர்ஜனத்தின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டு
விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் விசர்ஜனத்தின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்கள், கோவில்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகளுக்குப் பின் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி, களிமண் மற்றும் இயற்கை வண்ணங்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளையே பயன்படுத்த வேண்டும். ரசாயன வண்ணங்களை தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்கார பொருட்கள், மக்கும் தட்டுகள், கோப்பைகள், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்துவதுடன், குப்பையை தரம் பிரித்து அகற்றி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என, கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
