Religion
விநாயகர் சிலைகள் கரைப்பிற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டுகோள்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, இந்து முன்னணி அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்துவர்.
அதன் பின், வாகனங்கள் மூலம், ஊர்வலமாக கொண்டுவந்து மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் கரைப்பர்.
விநாயகர் சிலைகளை கரைக்க குழுவாக வரும் பக்தர்களுக்கு, குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்க மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போலீஸ் பாதுகாப்பு கோரி, இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், நேற்று காவல் நிலையத்தில் மனு அளித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)