Religion
விநாயகர் சிலை கரைக்க நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, செப். 6– ‘விநாயகர் சதுர்த்தி தெய்வீகக் கொண்டாட்டம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலின் -துாய்மையையும்,
‘விநாயகர் சதுர்த்தி தெய்வீகக் கொண்டாட்டம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலின் -துாய்மையையும், அழகையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்’ என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு முறைகள் குறித்து, மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு முறைகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, www.tnpcb.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், விதிமுறைகளின்படி சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
* பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மோகோலால் ஆன, சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. களிமண்ணால் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவற்றையும், பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்களையும் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மோகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது
* சிலைகளுக்கு நச்சுத்தன்மை கொண்ட, மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாய அடிப்படையிலான வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்
* விநாயகர் சதுர்த்தி தெய்வீகக் கொண்டாட்டம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலின் -துாய்மையையும் அழகையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
