Religion
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டுதல் வெளியீடு
சென்னை: விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நீர்நி லைகள், நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
களி மண்ணால் செய் யப்பட்டதும் மற்றும், 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்', பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான, விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத் தப்பலாம்.
கலெக்டர், காவல்துறை எஸ்.பி., மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை, கூடுதல் விபரங்களுக்கு அணுகலாம். மாவட்ட நிர்வாகத்தால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்கவும்.
இவ்வாறு, அதி ல் கூறப்பட்டுள்ளது.