முதல்வர் கோப்பை யோகாசன போட்டி வில் போல் வளைந்த மாணவ மாணவியர்
கோவை: முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான யோகாசன போட்டி, குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நேற்று துவங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகளப் பயிற்சயாளர் பத்மாவதி துவக்கி வைத்தார். 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, இந்த போட்டியில் பாரம்பரிய மற்றும் ஆர்ட்டிஸ்ட் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆர்ட்டிஸ்ட் யோகாசன பிரிவில் பெர்க்ஸ் பள்ளி மாணவி சிவானி முதலிடத்தையும், ப்ரீசன் அகாடமி மாணவி யாழினி இரண்டாம் இடத்தையும், பார்க் குளோபல் பள்ளி மாணவி பவியஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.




