Sport
முதல்வர் கோப்பை இறகு பந்து போட்டி சி.இ.ஓ., உள்ளிட்டோர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு முதல்வர் கோப்பை இறகு பந்து போட்டியில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., உட்பட அரசு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என 5 பிரிவுகளின் முதல்வர் கோப்பை போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து வருகிறது. இதில் அரசு ஊழியர்களில் பெண்களுக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பேட்மிட்டன் உள்அரங்கில் நேற்று நடந்தது. இப்போட்டியில் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., கார்த்திகா உட்பட அரசு ஊழியர்கள் பலர் ஒற்றையர் மற்றம் இரட்டையர் பிரிவில் பங்கேற்று விளையாடினர். தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து போட்டியில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் மேற்பார்வையில் உடற்கல்வி இயக்குனர் செந்தமிழ்செல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜே.ராஜா, நாகேஸ்வரன், சாமிதுரை, பாபு, ஏ.ராஜா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.