Sport
முதல்வர் கோப்பை கோ- கோ அசோக் நகர் பள்ளி சாம்பியன்
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மகளிர் கோ - -கோ போட்டியில், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
முதல்வர் கோப்பைக்கான சென்னை மாவட்ட அளவிலான மகளிர் கோ - கோ போட்டி, கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசோக் நகர் அரசு பள்ளி மாணவியர், காலிறுதி, அரையிறுதி என, அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இறுதி போட்டியில், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் வேலம்மாள் மேற்கு பள்ளியுடன் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அசோக் நகர் மாணவியர், 5 - 2 என்ற புள்ளிக்கணக்கில் முகப்பேர் வேலம்மாள் மேற்கு பள்ளியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.