Sport
முதல்வர் கோப்பை போட்டிகள் விளையாட்டு வீரர்கள் அசத்தல்

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என 53 ஆயிரம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி, சிலம்பம், கேரம், செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நாடார் சரஸ்வதி கலை கல்லுாரி முதலிடமும், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி 2ம் இடமும் பிடித்தன. கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லுாரி முதலிடமும், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி 2-ம் இடமும் பிடித்தன. பெண்களுக்கான செஸ் போட்டியில் நாடார் சரஸ்வதி கலை கல்லுாரி மாணவி முதலிடமும், போடி அரசு பொறியியல் கல்லுாரி மாணவி 2ம் இடமும் பிடித்தனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவகுமார், பயிற்சியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.