Sport
முதல்வர் கோப்பை போட்டி கல்லுாரி மாணவருக்கு தொடக்கம்

சேலம்:மிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், காந்தி மைதானத்தில், கடந்த, 9ல் தொடங்கி நடக்கிறது. இதில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு போட்டி முடிந்த நிலையில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நேற்று தொடங்கியது. காந்தி மைதானத்தில் தடகளம், கபடி, சிலம்பம், வாலிபால் போட்டிகள் நடந்தன. கோட்டை மாநகராட்சி கிளப்பில் இறகுப்பந்து; நீலாம்பாள் மெட்ரிக் பள்ளியில் கிரிக்கெட்; புனிதபால் பள்ளியில் கால்பந்து; செயின்ட் மேரீஸ் பள்ளியில் ஹாக்கி; வி.எஸ்.ஏ., கல்லுாரியில் பூப்பந்து; 'சாய்' விளையாட்டு விடுதியில் யோகா போட்டிகள், வரும், 18 வரை நடக்கிறது. வரும், 17, 18ல் பொது பிரிவினருக்கும், 21ல் அரசு ஊழியருக்கும், 22ல் மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவோர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.