Sport
கால்பந்து: சேந்தை அரசு பள்ளி முதலிடம்
சேந்தமங்கலம்:முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல வளாகத்தில் உள்ள விளையாட்டு
கோப்பை கால்பந்து போட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல வளாகத்தில்
உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், மாவட்டம்
முழுவதிலும் இருந்து, 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்று,
ஆறு சுற்றுகள் வரை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். இதன் காரணமாக
தமிழக அரசு சார்பில், 54,000 ரூபாய் பரிசுத்தொகையும், அரசு பள்ளி
மாணவர்களுக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமை ஆசிரியர்
குமரேசன் பாராட்டினார்.
உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சேந்தமங்கலம் அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, எட்டு மாணவர்கள், மாநில அளவில்
நடக்கும் முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி
பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.