Sport
பால் பேட்மின்டன் போட்டி மாணவியர் அபார விளையாட்டு
கோவை: கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை மாநில பால் பேட்மின்டன் போட்டி நிர்மலா மகளிர் கல்லுாரியில் நேற்றும், இன்றும் நடக்கிறது.
இதில் 15 பெண்கள் அணிகள், 16 ஆண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. கல்லுாரி முதல்வர் மேரி பபியோலா, செயலாளர் குழந்தை தெரஸ் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
ஆண்களுக்கான முதல் போட்டியில், மாருதி கல்லுாரி அணி 35–33, 35–32 என்ற புள்ளிகளில் என்.ஜி.எம். கல்லுாரியையும், எஸ்.டி.சி. 35–15, 35–25 என்ற புள்ளிகளில் ஜி.சி.டி. அணியையும், எஸ்.எஸ்.ஐ.இ.டி. அணி 35–28, 35–24 என்ற புள்ளிகளில் கே.ஐ.டி. அணியையும், பெண்களுக்கான போட்டியில், நிர்மலா கல்லுாரி அணி 35–10, 35–11 என்ற புள்ளிகளில் கே.சி.இ. அணியையும் வென்றன.