Sport
முதல்வர் கோப்பை கால்பந்து நிர்மலா கல்லுாரி முதலிடம்
கோவை, செப். 18– கல்லுாரி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டிகள் குனியமுத்துார் கிருஷ்ணா கலை
கோவை, செப்.
கல்லுாரி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டிகள் குனியமுத்துார் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், நிர்மலா கலை அறிவியல் கல்லுாரி அணி 2–0 கோல்களில் பாரதியார் பல்கலை அணியை வென்று முதலிடம் பிடித்தது. மைக்கேல் ஜாப் கலை அறிவியல் கல்லுாரி அணி 1–0 கோல் கணக்கில் கே.சி.டி., அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.