Sport
முதல்வர் கோப்பை ஸ்கேட்டிங் போட்டி
பொள்ளாச்சி: மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான ‘இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்’ போட்டிகள், பொள்ளாச்சி ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவேனஸ்வரி போட்டிகளை துவக்கி வைத்தார். அதில், 2,000 மீ., 3,000 மீ., என பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், வீரர்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். ஸ்கேட்டிங் சங்க நிர்வாகி சந்திரசேகர் மற்றும் பயிற்சியாளர்கள், நடுவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றோர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.