மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை
மேட்டூர்; மேட்டூர் அணையில் இருந்து ஆக., 1ல், கிழக்கு, மேற்கு கால்வாயில் நீர்திறக்கப்படும். அதன்-மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்-களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தொடர்ந்து, 137 நாட்களுக்கு பின், டிச., 15ல் பாசன நீர் நிறுத்தப்படும்.
கடந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இருந்ததால், முன்னதாக ஜூலை, 1ல் கால்-வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜன., 15 வரை என, 199 நாட்க-ளுக்கு பின் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு கடந்த ஆக., 1ல் நீர் திறக்க வேண்டும். அணையில் நீர்-மட்டம் குறைவாக இருந்ததால், கால்வாய் பாச-னத்துக்கு நீர்திறக்கவில்லை.கடந்த, 1ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 91.56 அடியாக உயர்ந்ததால் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்ததை தொடர்ந்து, கால்நடைகளின் தேவைக்கு குடிநீர் மற்றும் பாச-னத்துக்கு கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என, பாசன விவசாயிகள் நீர்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து பாசன பிரிவு பொறியாளர், கால்வாயில் நீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்-துள்ளனர். இதனால் விரைவில் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு அரசு நீர்திறக்க உத்தரவிடும் என எதிர்-பார்க்கப்படுகிறது.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






