Politics
மேட்டூர் கால்வாயில் குடிநீருக்கு 10 நாள் 400 கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் கரையோர மக்-களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வினா-டிக்கு, 400 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆக.,1 முதல் டிச.,15 வரை, 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர் கிழக்கு, மேற்கு கால்வாயில் திறக்-கப்படும். நீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
நடப்பாண்டு அணை நீர்மட்டம் குறைவாக இருந்-ததால் கடந்த ஆக.,1ல் பாசனத்துக்கு நீர் திறக்க-வில்லை. கால்வாய் கரையோர பகுதியிலுள்ள கிணறுகள் வறண்டு, நிலத்தடி நீரும் குறைந்-ததால், குடிநீர் தேவைக்காக கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என, கால்வாய் கரையோர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையேற்று மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம், 2:00 மணி முதல் வினாடிக்கு, 400 கனஅடி நீர் கிழக்கு, மேற்கு கால்வாயில் திறக்கப்-பட்டது. இந்த நீர் செப்., 17 வரை, 10 நாட்கள் திறக்-கப்படும் திறக்கப்படும் என, நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.