Politics
மேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!

மேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்த நிலையில், பாசனத்துக்காக நாளை காலை திறக்கப்படுகிறது.
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணையை இன்று வந்தடைந்தது. பாசனத்திற்காக கல்லணையிலிருந்து நாளை காலை 11 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் வினோத் திறந்து வைக்கிறார்.
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் ஒன்றாம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது.
இதனையடுத்து நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பாசனத்திற்காக கல்லணை திறக்கப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு அணையை திறந்து வைக்கிறார்.
இதில் டெல்டா மாவட்ட விவசாயிகள், ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Cauvery water from Mettur has reached Kallanai! Release scheduled for tomorrow morning!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.