Politics
வாய்க்காலில் நீர் செல்வதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம்:கட்டளை புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
கதவணையில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மேலும்
கதவணை பகுதியில் வரும் காவிரி நீர், அருகில் உள்ள கட்டளை வாய்க்காலில்
பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில்
இருந்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு மாயனுார் கதவணைக்கு,
5,332 கன அடி நீர் வருகிறது. இதில் கதவணை ஷட்டர் வழியாக டெல்டாவிற்கு
காவிரி ஆற்றில் 2,142 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கட்டளை மேட்டு
வாய்க்கால், புதிய வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், காய்ந்த நிலையில்
உள்ள வாழை மரங்கள் தற்போது உயிர் பிடித்து வளர்ந்து வருகிறது.
தொடர்ந்து பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போது, வாழை
செழிப்பாக வளரும் என விவசாயிகள் கூறினர்.