Politics
மேட்டூர் அணை பாசன நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர்: மேட்டூர் அணை யின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 1ல் அணை நீர்மட்டம், 91.56 அடி, நீர்இருப்பு, 54.45 டி.எம்.சி.,யாக இருந்தது. அன்று டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் விஜய், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 7,000 கனஅடி நீரை திறந்து வைத்தார். 5 நாட்களாக வினாடிக்கு, 7,000 கனஅடி நீர் வெளியேற்றிய நிலையில், அணை, சுரங்க மின் நிலையங்களில், 70 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில், 70 மெகாவாட் என, 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்-பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதல், டெல்டா பாசன நீர்திறப்பு வினாடிக்கு, 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணை, சுரங்க மின் நிலையங்களில், 100 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில் படிப்படியாக, 15 மெகாவாட் என, 105 மெகாவாட் என தினமும் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி, 205 மெகாவாட்டாக அதிகரித்தது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
