Politics
இறங்குமுகத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த ஆக., 4ல், 73.02 அடி, நீர்இருப்பு, 35.35 டி.எம்.சி.,யாக இருந்தது. கர்நாடகாவின்

அணை நீர்மட்டம், கடந்த ஆக., 4ல், 73.02 அடி, நீர்இருப்பு, 35.35
டி.எம்.சி.,யாக இருந்தது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில்
திறக்கப்பட்ட நீர் தொடர்ந்து வந்ததால் கடந்த, 6ல் மேட்டூர் அணை
நீர்மட்டம், 92.39 அடி, நீர்இருப்பு, 55.42 டி.எம்.சி.,யாக
அதிகரித்தது.
1ல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட,
வினாடிக்கு, 7,000 கனஅடி நீர், நேற்று முன்தினம் காலை முதல், 12,000
கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இருந்து குடிநீர் தேவைக்கு கால்வாயில் வினாடிக்கு, 400 கனஅடி நீர்
திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு,
9,512 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று காலை, 8,558
கனஅடியாகவும், மாலை, 6,148 கனஅடியாகவும் படிப்படியாக சரிந்தது.
திறப்பை விட வரத்து குறைந்ததால் கடந்த, 6ல், 92.39 அடியாக இருந்த
மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 4:00 மணிக்கு, 91.92 அடியாக
சரிந்தது.
கிழக்கு, மேற்கு கால்வாயில், 1955 முதல், 2026 வரை, 72 ஆண்டுகள் தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. இதில் கால்வாயில் குடிநீருக்கு, 3 முறை தண்ணீர்
திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், 4ம் முறை திறக்கப்பட்டது.
அதற்கு முன், செடி, கொடிகள், புதர்கள், குப்பை ஆங்காங்கே குவிந்து
காணப்பட்டது. அவை, குடிநீருக்கு தண்ணீர் வெளியேற்றிய நிலையில்
ஆங்காங்கே மொத்தமாக தேங்கின. குறிப்பாக காவேரிகிராஸில்,
கால்வாயில் தேங்கி நின்ற குப்பையை, நீர்வளத்துறை ஊழியர்கள், நேற்று
பொக்லைன் மூலம் அகற்றி கரையோரம் கொட்டினர். அதேபோல், கால்வாயின்
பல்வேறு இடங்களில் தேங்கிய குப்பை அகற்றப்படும் என, நீர்வளத்துறை
பொறியாளர்கள் தெரிவித்தனர்.
கால்வாயில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை,
பில்லுக்குறிச்சிக்கு வந்தது. இதை வரவேற்று, அப்பகுதியை சேர்ந்த
பழனிசாமி, அழகுதுரை, நடேசன் உள்பட, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள்
நேற்று ஆட்டுகிடா வெட்டி தண்ணீருக்குள் ரத்தத்தை விட்டு பூஜை
செய்தனர். பின் கால்வாயில் வந்த தண்ணீருக்கு மலர்களை துாவி
வரவேற்றனர்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

