Politics
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணராயபுரம்:மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின்

கிருஷ்ணராயபுரம்:மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்கும் போது, பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு ஜூன் 12ல், அணை நீர்மட்டம், 79.56 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கடந்த ஆக., 1ல், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது.இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை, முதல்வர் விஜய் கடந்த, 1ல் திறந்து வைத்தார். தற்போது பாசன தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு, 10,401 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதில் காவிரி ஆற்றில், 9,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மூன்று பாசன வாய்க்கால்களில், 980 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

