Politics
மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கரூர்:மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில், மாயனுார் கதவணை
க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும்
அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்கும் போது, பாசனத்துக்கு நீர்
திறக்கப்படும். இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம்
ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும்.
நடப்பாண்டு ஜூன் 12ல், அணை நீர்மட்டம், 79.56 அடியாக இருந்ததால்,
டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கடந்த ஆக., 1ல்,
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்,
தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை, முதல்வர் விஜய், கடந்த, 1ல்
திறந்து வைத்தார். நேற்று முன்தினம் காவிரி ஆற்று தண்ணீர் கரூர்
வந்தடைந்தது. நேற்று மாலை, 4:00 நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு,
4,081 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதில் காவிரி ஆற்றில், 2,084 கன
அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கதவணையில், 514 மில்லியன் கன அடி
தேக்கி வைக்கப்பட்டுள்ளது.