கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது
கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
காவேரி கிராஷ் அருகே உள்ள குண்டுகல்லூரில் பெண் ஒருவா் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த விடியோ வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, மேட்டூா் காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் குண்டுக்கல்லூரில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அதில், வெங்கடாஜலம் மனைவி ஈஸ்வரி (47) வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்களை போலீஸாா் கைப்பற்றி அவரை கைது செய்தனா்.







