Arts, culture, entertainment and media
மதுபாட்டில் விற்றவர் கைது
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோடு அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார்குப்பம் பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருள்பாண்டி, 28; என்பவரை கைது செய்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.