Arts, culture, entertainment and media
422 மதுபாட்டில் பறிமுதல் பதுக்கி விற்ற 3 பேர் சிக்கினர்
சேலம்; சேலம் மாநகர் மதுவிலக்கு போலீசார், நேற்று, வீராணம், மன்னார்பாளையத்தில், சோதனை மேற்கொண்டனர். அப்போது, எம்.பாலப்பட்டி பிரிவு, வண்ணார் தெருவை சேர்ந்த கோபி மனைவி கீதா, 40, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 327 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அங்குள்ள அரசு டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பதாக கீதா தெரிவித்தார்.
தொடர்ந்து அவரை கைது செய்தனர். அதேபோல் சேலம், தாதகாப்பட்டி, தாகூர் தெருவில் மதுபா-னங்களை பதுக்கி விற்ற மாரியம்மாள், 64, யுவ-னேஸ்வரன், 43, ஆகியோரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து, 95 பாட்டில்களை பறி-முதல் செய்தனர்.மேட்டூர் போலீஸ்
மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி காவேரிகிராஸ், குண்டு
கல்லுாரை சேர்ந்த, ஸ்ரீதர் மனைவி ஈஸ்வரி, 47. இவர் வீடு அருகே மேட்டூர் போலீசார் நேற்று காலை சோதனை செய்தனர். அப்போது, 38 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஈஸ்வரியை கைது செய்தனர்.