Arts, culture, entertainment and media
123 மதுபாட்டில் பறிமுதல் விற்ற 2 பேர் சிக்கினர்
சேலம்,:சேலம், கருப்பூர் போலீசார், மஞ்சுளப்பள்ளத்தில் உள்ள தாபாவில், நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு
கருப்பூர் போலீசார், மஞ்சுளப்பள்ளத்தில் உள்ள தாபாவில், நேற்று
சோதனை நடத்தினர். அப்போது அங்கு வைத்திருந்த 108 மதுபாட்டில்களை
பறிமுதல் செய்து விசாரித்ததில், தின்னப்பட்டி, ரெட்டிகாட்டுவளவை
சேர்ந்த செல்வகதிரவன், 34, அரசு டாஸ்மாக் பாட்டில்களை மொத்தமாக
வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்றதை ஒப்புக்கொண்டார். இதனால் செல்வ
கதிரவனை கைது செய்தனர்.
அதேபோல் சிவதாபுரம், குடுமியான் தெருவை சேர்ந்த மோகன், 43, என்பவரும், டாஸ்மாக் பாட்டில்களை வீட்டில் வைத்து விற்ற
கையும், களவுமாக சிக்கி கொண்டார். அவரது வீட்டில், 15 பாட்டில்களை
பறிமுதல் செய்த கொண்டலாம்பட்டி போலீசார், மோகனையும் கைது
செய்தனர்.