Arts, culture, entertainment and media
மதுபாட்டில் விற்றவர் கைது
விருத்தாசலம்: கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த படுகளாநத்தம் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து மகன் பாலகிருஷ்ணன், 44. இவரது வீட்டில் மறைத்து வைத்து கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், விருத்தாசலம் போலீசார் சோதனை செய்தனர்.
அதில், வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த 10 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.