Arts, culture, entertainment and media
மது விற்ற மூதாட்டிக்கு காப்பு
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று, சின்னதிருப்பதி மீனாட்சி நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில், ஒரு பெண் மது விற்பனையில் ஈடுபட்டதை பார்த்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த அமராவதி, 57, என்பதும், டாஸ்மாக் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 23 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.