Arts, culture, entertainment and media
மதுபாட்டில் பறிமுதல் :ஒருவர் கைது
சாத்துார் :சாத்துார் என். மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் 48. ரயில்வே கேட் அருகில் மது பாட்டில் விற்றார்.அவரிடமிருந்து 180 மி.லி., அளவு கொண்ட 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாத்துார் :சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 41.இவரது மனைவி உமா மகேஸ்வரி 32. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு இருவருக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாத்துார் :வெம்பக்கோட்டை மடத்துப் பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரி 45. இவர் மகள் ஜோதிலட்சுமி 21.கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் காலையில் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.