Arts, culture, entertainment and media
மது பாட்டில் கடத்தல் 5 பேர் கைது
மயிலம்: மயிலத்தில், மது பாட்டில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் காவல் நிலையம் எதிரே இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 ஸ்கூட்டர், ஒரு ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 173 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், பாதுார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், 23; சந்தோஷ், 18; ஆனந்தராஜ், 33; பையூர் கிராமத்தைச் சேர்ந்த கமலதாஸ், 26; ஆலத்துார் தினேஷ்குமார், 26; என தெரிந்தது.
தொடர்ந்து 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள், ஸ்கூட்டர், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.