Arts, culture, entertainment and media
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் மதுபாட்டில் விற்ற 2 பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொட்டியம் ஏரிக்கரையில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற முருகன், 60; என்பவரை கைது செய்து, 25 மதுபாட்டில்களையும், இந்திலியில் கலியன் மகன் முத்துகிருஷ்ணன், 57; என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், முருகேசன் ரோந்து பணியின் போது, நல்லாத்துாரில் மதுபாட்டில் விற்ற குமார், 44; தாவடிப்பட்டில் கிருஷ்ணன் மனைவி சந்திரா, 55; கரடிசித்துாரில் காமராஜ் மனைவி வெள்ளையம்மாள், 38; ஆகிய 3 பேரையும் கைது செய்து, தலா 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.