லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!
முதல்வர் விஜய், ஐரோப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து பேசவும் நிகழ்ச்சி நிரல்கள் தயாராகின. 'டிப்ளமேட்டிக்' பாஸ்போர்ட் நடைமுறைகளுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்றுவந்தார் முதல்வர்.
வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த `வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேற்கொண்டு வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார் முதல்வர் விஜய்.








/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






