Arts, culture, entertainment and media
முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
6 நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.

லண்டனில் கார் ரேஸை தொடங்கி வைப்பதற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை மைதானத்தில் நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் ஆரத்தழுவி வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தில் உள்ளன.
முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு கார் ரேஸ் வீரரும் நடிகருமான அஜித் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
இன்று லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெறும் அஜித் பங்கேற்க கூடிய கார் ரேஸினை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் விஜய்யுடன் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள கார் ரேஸ் மைதானத்தின் மாதிரிக்காக பார்வையிடுகின்றனர்.
இந்த நிலையில் மைதானத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அஜித் குமார் ஆரத் தழுவி வரவேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு காணப்பட்ட நிலையில், இன்றைய கார் ரேஸ் வீடியோக்களை இருவரது ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
Chicken Storage Tips | ஃப்ரிட்ஜில் சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
ஃப்ரிட்ஜில் சிக்கனை எத்தனை நாட்கள் வைப்பது பாதுகாப்பானது?
அதனைச் சரியாகப் பதப்படுத்தும் முறைகள் என்னென்ன?
வீக்-எண்ட் சிக்கன் வாங்கும் முன்னாடி இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
