Arts, culture, entertainment and media
லண்டனில் அஜித் கார் பந்தயம்! முதல்வர் விஜய் பார்க்கச் செல்கிறார்?

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்க்கச் செல்வதாக வெளியான தகவல் பற்றி...
லண்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்திக்கவும், முக்கியத் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், வருகின்ற செப். 10ஆம் தேதி பிரிட்டன் நாட்டுக்குச் செல்லவுள்ளார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் விஜய், செப். 16 வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த நிலையில், செப். 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை முதல்வர் விஜய் நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்கவுள்ள அஜித் குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார்,
”தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
Ajith's car race in London! Is Chief Minister Vijay going to watch it?
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.