Arts, culture, entertainment and media
முதல்வர் விஜய் முதன்முறையாக வெளிநாட்டு பயணம்; அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க செப்டம்பர் 10-தேதி இரவு லண்டனுக்கு கிளம்புகிறார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய். சென்னையிலிருந்து துபாய், அங்கிருந்து லண்டன் என அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரசு முறைப் பயணமாக வெளிநாட்டிற்கு விஜய் செல்வது இதுவே முதல் முறை.
கடந்த மாதம் தான், தொழில் முதலீட்டு மாநாட்டை சென்னையில் நடத்தினார் விஜய். அதற்குள் வெளிநாட்டிற்கா? என்கிற கேள்வியும் அவரது பயணம் குறித்து விமர்சிக்கப்படுகிறது.
முதல்வர் விஜய்யுடன் அரசு அதிகாரிகள், உதவியாளர்கள் செல்கின்றனர். இதுவரை, தனி சிறப்பு விமானத்தில் தனது சொந்த செலவில் சென்று வந்தவர், முதல் முறையாக தற்போது பயணிகள் விமானத்தில் (ஈகே 547 எமிரேட்ஸ்) பறக்க இருக்கிறார்.
"ஒரு வாரம் வெளிநாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்பும் விஜய்யின் பயணச் செலவுகள் உட்பட அனைத்தையும் அரசு ஏற்கிறது. இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளையும், செலவுகளையும் தமிழக அரசின் தொழில் துறை கவனித்துக் கொள்கிறது" என்கிறார்கள்.
இதற்கிடையே, முதல்வரின் தனி செயலாளர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பாக, துபாய் சென்றுவிட்டனர். துபாய்க்கு விஜய் வந்ததும் அவருடன் இவர்கள் இணைந்து கொள்வார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
முதல்வர் வெளிநாடு செல்வதையொட்டி, இன்று காலை 11.00 மணிக்கு சென்னை விமான நிலையத்தில், அனைத்து நிலை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)